(UTV | கொழும்பு) – தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை, மேலும் தொடர்வதற்கு, அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த ஊரடங்கு உத்தரவுகள், குறைந்த வருமானம் பெறும், விசேடமாக நாளாந்த வருமானம் பெறுவோரை பாரிய அளவில் பாதிப்படையச் செய்துள்து என இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல், ஊரடங்கு விதிமுகளை கடுமையாகக் கடைபிடிக்கவேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் மக்கள், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் போன்ற சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் உத்தரவு வழங்கினால் மாத்திரமே, தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வரமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.