(UTV | கொழும்பு) – திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் நேற்று (409) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 401 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏனைய 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.
இதனையடுத்து, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றளார்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 8266 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 11744 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6140 வைத்தியசாலைகளில் உள்ளனர்.
5581பேர் குணமடைந்துள்ளதுடன், 23 பேர் இதுவரை இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.