(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடவத்தை, கம்பஹா, சீதுவ, கட்டுநாயக்க ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த காலப்பகுதியில் 07 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1,122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் 163 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්