உள்நாடு

சிலாபம் சந்தைக்கு பூட்டு

(UTV |  புத்தளம்) – சிலாபம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட பொது மீன் மற்றும் காய்கறி சந்தையை, நாளை (27) தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர சபையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் நால்வர், சிலாபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுகாதார பிரிவினர் முன்வைத்த காரணங்களுக்கமைய, பொது சந்தையை ஒரு வாரத்துக்கு மூட, சிலாபம் நகர சபையின் தவிசாளர் துஷான் அபேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

ஏழாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி