கிசு கிசு

இரண்டாவது அலைக்கு காரணம் சீதுவ – நட்சத்திர ஹோட்டலே : முழுமையான விபரம்

(UTV | கொழும்பு) – நாடாளாவிய ரீதியில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு துருக்கியில் இருந்து இலங்கை வந்த யுக்ரேன் விமான ஊழியர்களே காரணம் என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மினுவாங்கொட Brandix ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாவது அலையின் ஆரம்பம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பாதுகாப்பு பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த யுக்ரேன் விமான ஊழியர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். இந்த குழுவில் 11 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சீதுவ பிரதேசத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் போது ஹோட்டல் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட விமான ஊழியரான யுக்ரேன் நாட்டவர் ஒருவர் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலை அனுதிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஏனைய விமான ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் 60 பேரில் 18 பேர் தினமும் வீடுகளுக்கு சென்று பணிக்கு வந்துள்ளார்கள். அதில் 18 பேர் செப்டெம்பர் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து பணிக்கு சென்றுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் ஹோட்டல் நிர்வாகத்தினர் கொரோனா சட்டத்திட்டத்தை கருத்திற்கொள்ளாமல் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பளித்துள்ளர்.

வீடுகளுக்கு தினமும் சென்ற 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அவர்களில் மூவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை பணிக்கு சென்றுள்ளனர். ஹோட்டல் சமையல் கலைஞர், ஆடை கழுவும் பிரிவிற்கு அதிகாரியும் அவர்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினரை சோதனையிடும் போது இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளிடம் காணப்பட்ட கொரோனா அளவை விடவும் அதிகம் திறன் கொண்ட வைரஸ் உடலில் இருந்தமை உறுதியாகியுள்ளது.

முன்னர் இந்த வைரஸ் உடலில் நூற்றுக்கு 15 – 18 வீதமான அளவே காணப்பட்டது. எனினும் இவர்களிடம் 29 – 31 வீதம் காணப்பட்டுள்ளது. இது புதிய நிலைமையாகும். பிரென்டிக்ஸ் நோயாளியின் உடலில் 29 – 31 வீதம் வைரஸ் காணப்பட்டுள்ளது. குறித்த யுக்ரேன் நாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர் ஒருவர் பிரென்டிக்ஸ் ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது என விசாரணை நடத்திய சிரேஷ்ட அதிகாரி உறுதி செய்துள்ளார்.

அத்துடன் யுக்ரேன் நாட்டு ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் சிலாபத்தில் இருந்து தினமும் பொது போக்குவரத்து ஊடாக சீதுவ பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரென்டிக்ஸ் பரவலின் முதலாவது நோயாளிக்கு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அந்த பெண் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலும் நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது. ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிரென்டிக்ஸ் பரவலின் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டாவது அலை கொரோனா பரவலின் அளவு முதலாவது அலையை விடவும் இரண்டு மடங்கு அதிகமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தொற்று நாடளாவிய ரீதியாக பரவி வருகின்றமையானது பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் உள்ளது எனலாம்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு விழுந்தது ஆப்பு

8,00,000 யூரோ பெறுமதிப்பான சவூதி இளவரசியின் நகை திருட்டு

உணவில் மனித பல்?- 75 அமெரிக்க டொலர் இலவச கூப்பன்