உலகம்

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு

(UTV | ஆப்கானிஸ்தான் ) –  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி கூடம் ஒன்றிற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தாலிபான் தெரிவித்திருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!

இஸ்ரேல் சுகாதார அமைச்சர் மற்றும் மனைவிக்கு கொரோனா