(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 30 வாகனங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 104 வாகனங்கள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්