(UTV | கொழும்பு) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் பயணிகள் ரயில்கள் சில மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிலாபம், பொல்கஹவெல, ரம்புக்கன்னை, அளுத்கம, அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.