உலகம்

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ், அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா வங்கி கணக்கானது Trump International Hotels Management கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் வங்கி கணக்குகள் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்