(UTV | கொழும்பு) – இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) போட்டி தொடரின் கண்டி டஸ்கர்ஸ் (Kandy Tuskers) அணியின் உரிமத்தை பொலிவூட் நட்சத்திரம் சல்மான் கானின் குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சல்மான் கானின் சகோதரர் சோஹைல் மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளரான அவரது தந்தை சலீம் கான் ஆகியோர் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரித்தை பெற்றுள்ளனர்.
இலங்கையின் “லங்கா பிரீமியர் லீக்” கிரிக்கெட் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්