உள்நாடு

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) –  தற்காலிமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பொலிஸ் நிலைய அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

—————————————————————————–[UPDATE 08.00 am]

தற்காலிகமாக மூடப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

அதன்படி, புறக்கோட்டை மற்றும் கொம்பனிதெரு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பின் பதிவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

பேரூந்துகளில் ஒலி எழுப்பத் தடை