உள்நாடு

20 ஆவது திருத்தம் – நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

——————————————————- [UPDATE]

20 அரசியலமைப்பு : உயர் நீதிமன்ற நிலைப்பாடு இன்று பாராளுமன்றத்திற்கு

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று(20) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் இன்று (20) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அது தொடர்பான விவாதம் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்