(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,440ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 5585 ஆக அதிகரித்துள்ளது.