(UTV | கொழும்பு) – இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வனுஷி வால்டர் (Vanushi Walter) நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
இதற்கமைய, நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்தின் பொதுத் தேர்தலில் 14,142 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
39 வயதுடைய வனுஷி, மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.