வகைப்படுத்தப்படாத

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்னறலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று 64 நான்காவது நாளாகவும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 48 நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 6வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர் காணிகள் உட்பட 617 ஏக்கர் காணிகளை கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி அந்தப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

காலநிலை

ராஜித மற்றும் பாட்டளிக்கு அழைப்பு

அமெரிக்காவில் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு