கிசு கிசு

மெலிபன் பிஸ்கட்டில் கோஸ்? மாஸ்க்? : 15,000 இற்கு மறைக்கப்பட்ட உண்மை

(UTV | கொழும்பு) – மெலிபன் மில்க் ஷோர்ட்கேக் பிஸ்கட் பொதியில் இருந்து புதிதாக எடுக்கப்பட்ட பிஸ்கட் ஒன்றினுள் கோஸ் (gauze) எனப்படும் மருந்தகங்களில் பயன்படுத்தும் சிறு துண்டு ஒன்று இருந்தமை தொடர்பிலான சம்பவம் தொடர்பில் மெலிபன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தினால் (Maliban Biscuit Manufactories (Pvt) Limited) குறித்த நுகர்வோருக்கு ரூ.15,000 பணத்தினை வழங்கி சம்பவத்தினை மூடி மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிஸ்கட்டினுள் gauze துண்டு இருந்தமை தொடர்பில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே அவரது முகநூல் பக்கத்தில் கடந்த 11ம் திகதி புகைப்படங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.

https://www.facebook.com/vithanage.ranjith/posts/3889828157711246

எவ்வாறாயினும், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகேவை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த பிஸ்கட் பொதிகளை சந்தைகளில் இருந்து வேறுபடுத்தி அதனை அழிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிய போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை எனவும் இன்றைய தினம் குறித்த முறைப்பாடு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் குறித்த gauze துண்டு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு குறித்த பிஸ்கட் பொதியினை வாங்கிய நபர் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தினை அறிந்ததும் பிஸ்கட் பொதியினை வாங்கியவரின் வீட்டிற்கு சென்று மெலிபன் அதிகாரிகள் அதனை மீளவும் பெற்றுக் கொண்டு மற்றுமொரு பிஸ்கட் பொதி ஒன்றினையும் வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள gauze துண்டானது Face Mask இனது என குறித்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக மேலும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் குறித்த gauze ஆனது Face Mask இனது என்றால் கொரோனா ஆதிக்கத்துடன் அங்குள்ள ஊழியர்கள் எந்தளவு சுகாதார நடைமுறைகளை கடைபிடித்துள்ளார்கள் என அறிய முடிகின்றது. மேலும் இந்த உற்பத்திகளின் தரம் குறித்துள் கேள்வி எழுந்துள்ளது.

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் 1954ம் ஆண்டு பிஸ்கட் உற்பத்திகளை ஆரம்பித்திருந்தது. இங்கு பிஸ்கட் தவிர்ந்த தேயிலை, பால்மா மற்றும் போசாக்குள்ள மேலதிகள் உற்பத்திகளையும் உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வருடங்கள் 26 – ஆட்டம் நிறைவுறும் தருணம் இது

இலங்கையர்களை தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!

மேகன் மெர்க்கல் கர்ப்பம்…