(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளை(15) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கைத்தொழிற்சாலைகளில் அலுவல்களை முன்னெடுக்க முடிவதுடன், இதற்காக சமுகமளிக்க வேண்டிய ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.