கிசு கிசு

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா

(UTV | தம்புளை ) – தம்புளை பொருளாதார நிலையத்திற்கு வந்த நபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு தொற்றாளர்களும் ரம்புக்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் இருவரும் இந்துராகார பிரதேசம் மற்றும் திவுலப்பிட்டிய, பட்டபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் இருவரும் பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுடன் கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

பிரென்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அறிந்துக் கொண்ட பின்னர் இந்த நபர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விலையில் குறைவு

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி!

ஜெனீவாவில் தலை தப்பியது : புர்கா தடை விரைவில் [VIDEO]