(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவசரப்படத் தேவையில்லை என நோயியல் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் 2 தொடக்கம் 10 நாட்களினுள்லேயே அதனை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 3,306 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.