உள்நாடு

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

(UTV | கொழும்பு) – மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி தினம் இன்றாகும்.

மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை இதுவரை பதிவு செய்துகொள்ளாதவிடத்து, அவர்களை உடனடியாக தங்களின் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்களை மறைத்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சொத்துக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் அல்லது அரசுடமையாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் பாரிய கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் 1700இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 1053 பேருக்கு கொரோனா ரைவஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் கண்டனம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு!