(UTV | அமெரிக்கா) – அமெரிக்க பிரஜை ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய முக்கிய பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி அமெரிக்காவின் மினிசபோலி சந்தேகத்தின் பெயரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, ஜார்ஜ் பிளாய்ட் கைதிற்கு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார்.
இதனால் பொலிஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து நெரித்தார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில், ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம் தொடர்பாக 4 பொலிஸார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதுடன், அதில், டெரிக் ஸ்யவின் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு முக்கிய காரணமானவருமான டெரிக் ஸ்யவினுக்கு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.