(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, குடிவரவு , குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கமைய, நாளை(07), நாளை மறுதினம்(08) மற்றும் எதிர்வரும் 09ம் திகதிகளில், திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அலுவலக நேரங்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரையிலான காலப்பகுதியில், தொடர்பு கொண்டு, உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு பொது மக்களுககு அறிவிக்கப்பட்டுள்ளது.