உள்நாடு

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கம்பஹா) -இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(05) மாத்திரம் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 101 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், மேலதிகமாக, வௌிநாடுகளிலிருந்து திரும்பிய 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தொழில் புரியும் சுமார் 2,000 பேரை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,000 இற்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி

பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் புதிய சீர்திருத்தங்கள் – சுரேன் ராகவன்.

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை