கிசு கிசு

எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது

(UTV | கொழும்பு) – கொரோனா பரவல் தொடர்பில் எதிர்வரும் 72 மணித்தியாலமானது மிகவும் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

திவுலப்பிட்டிய – ப்ரேண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை பணியாட்கள் 1500 பேருக்கும் அதிகமானோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதில் 150 பேருக்கான முடிவுகள் வெளியாகிய நிலையில் அதில், 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை சந்திப்பதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூகத்துடன் நெருங்கிய விதத்தில் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் இராணுவத் தளபதி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் முகக்கவசத்தினை அணிந்திருக்குமாறும் ஒரு மீட்டர் தூரத்தில் இடைவெளி பேணுமாறும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய தேவையின்றி வௌியே செல்ல வேண்டாம். எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் நாங்கள் இதனை இனங்கண்டு கொள்ளும் வரையில், யாரேனும் இப்பகுதிகளுக்கு வருகை தற்திருந்தால் அதனை மறைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறும் நீங்கள் செய்தவை உங்களுக்கே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

’13 வது கொரோனா மரணம்’ – சந்தேகத்தின் பேரில் ஒருவர் எரிப்பு

முதலையை விழுங்கிய பாம்பு…-(படங்கள்)