(UTV | துபாய்) – ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவர் தோனி விக்கெட் காப்பாளர் 100 பிடிகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் காப்பாளராக 100 பிடிகளை பிடித்துள்ளார்.
இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.