உள்நாடு

கம்பஹா – திவுலப்பிட்டிய சம்பவம் – பெண் IDH வைத்தியசாலைக்கு

(UTV | கொழும்பு) – சுகாதார பிரிவின் தகவல்களின் படி, கம்பஹ – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இனங்காணப்பட்ட பெண் கொரோனா தொற்றாளர் தனியார் தையல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது.

நேற்று(03) இரவு குறித்த பெண் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த பெண் IDH வைத்தியசாலையில் உட்சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காய்ச்சல் நோய் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் உள்வாங்கப்பட்ட நிலையில் சுகமுற்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதியாக்கப்பட்டுள்ளது.

பின்னர், கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் ஆரம்பம்