உள்நாடு

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

 சொகுசு புகையிரத சேவை விரைவில்..

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2023