உள்நாடு

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது

(UTV | கொழும்பு) – 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டு விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுட்டு வருவதாகவும், நிலமை சீரடைந்த பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு