கேளிக்கை

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

(UTV | இந்தியா) – கொலிவூட் பிரபல நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காதலனுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்…

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது