உள்நாடு

இருபது : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

———————————————   [UPDATE 10:20 AM]

20 ஆவது அரசியலமைப்பு : மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் [UPDATE]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

———————————————   [UPDATE 08.42 AM]

20 ஆவது அரசியலமைப்பு : மனுக்கள் மீதான விசாரணை இன்று

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(29) ஆரம்பமாகவுள்ளது.

மனுக்களை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி