(UTV | சுவிட்சர்லாந்து) – கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக் ரேயான் தெரிவித்துள்ளார்.
உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் 993,463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குளிர்காலம் நெருங்குவதால் வட துருவ நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதுடன், ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.