(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு மாநாடு இன்று(26) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.
இதன்போது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.