கேளிக்கை

கொரோனாவும் பிரபலங்களும் – நிழலாக உலா வரும் ஊடகங்கள்

(UTV | சென்னை) – பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ள நிலையில் ஊடகங்களும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி லேசான கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பிபி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லஎஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் ஆயுத படை பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிபியை காண அவரது நண்பர்கள் இளையராஜா உள்ளிட்டோர் வர இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலைமை தொடர்பில் அறிய நேற்று இரவு முதல் ஊடகங்கள் பல வரிசையாக வைத்தியசாலை முன்றலில் தவமிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் இந்தியாவில் 92,317 பேர் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

தொடரும் ‘புஷ்பிகா’ புராணம்

பொலிஸ் அவதாரத்தில் ஆண்ட்ரியா…