உள்நாடு

மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிய ஜனாதிபதி தீர்மானம்

(UTV | கொழும்பு) – மக்கள் முகங்கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாக கண்டு அவர்களின் குறைகளை கேட்டறிய ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் எனவும் தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்