(UTV | கொழும்பு) – இலங்கையின் தனியார் மருத்துவனைத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை ஆய்வுக்கூட துறையில் புதிய புதிய பரிமாணத்தின் அடையாளமாகக் கொண்டு தமது 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதலாவது ஒன்லைன் (LAB TESTS ONLINE) ஆய்வுகூட இணையத்தளம் கடந்த 18ஆம் திகதி நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாஸ மற்றும் பிரதித் தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நவலோக்க மருத்துவமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய எண்ணக்கருவிற்கு அமைய இணையத்தளத்தில் Nawaloka Lab Tests on-Line இணையத்தளத்திற்கு பிரவேசித்து டொக்டரினால் பெற்றுக் கொடுக்கப்படும் நோய் பரிசோதனை prescription மூலம் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, மேற்கொள்ளக் கூடிய ஆய்வுக்கூட பரிசோதனையை சரியாக தேர்வு செய்து இதற்காக செல்லும் நேரம் குறித்தும் தெரிந்து கொள்ளப்படுவதோடு சேவையைப் பெற்றுக் கொள்பவரால் பணத்தைச் செலுத்தும் முறை மற்றும் ஆய்வுக்கூட மாதிரியை வழங்கும் விதமும் குறிப்பிட வேண்டும். குறித்த மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கையை வாடிக்கையாளரினால் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் இலத்திரனியல் தபால், இணையத்தளம் அல்லது Courier சேவையின் ஊடாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இந்த சேவையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும். மருத்துவ ஆய்வுகூட மாதிரி மருத்வமனைக்கு வழங்கும் போது அற்காக சில விதிமுறைகள் இந்த இணையத்தளத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மாதிரியை சேகரித்து நடமாடும் சேவை, Drive Through சேவை அல்லது மருத்துவமனைக்கு பிரவேசித்து மருத்துவ ஆய்வுகூடத்திற்கு மாதிரியை வழங்க முடியும்.
இந்த முறைமையின் மூலம் வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைக்கு உரிய நோயாளியினால் பெற்றுக் கொடுக்கப்படும் இரத்தத்தின் மாதிரிகளை நவலோக்க மருத்துவமனையினால் நோயாளியின் வீடுகளுக்கு சென்று பெற்றுக் கொள்வதுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வீட்டிற்கே வந்து வழங்குவதற்கான வசதியையும் பெற்றுக் கொள்வதன் ஊடாக நோயாளி ஓய்வான ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும். நவலோக்க மருத்துமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணையத்தளத்தினால் மருத்துவ ஆய்வுகூட சேவையை துரிதமாகவும் மற்றும் எளிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் வங்கி கார்ட் அட்டை மூலம் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதனால் ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பணப் பயன்பாடு இல்லாமல் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நோயாளியின் தேவைக்கு ஏற்ப அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை நேரடியாக அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் டொக்டருடன் தொடர்புபடுத்த முடியும். நவலோக்க மருத்துவ ஆய்வுகூட ஊழியர்களினால் நிர்மாணிக்கப்பட்ட ‘Lab Tests On Line’ சேவையின் மூலம் நோயாளர்கள் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகள் குறித்து விரிவான அறிவினைப்பெற்றுக் கொடுப்பதோடு இந்த அறிவுறுத்தலானது ஒட்டுமொத்த செயற்பாடுகளின் அங்கமாக இருப்பதோடு நோய் கண்டறிதல் குறித்து மேற்கொள்ளப்படும் விசேட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும் சிறந்த அறிவினை நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
‘Lab Tests On Line’ சேவையினை ஆராயும் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை குறித்து விரிவான தகவல்கள், பரிசோதனையின் நொக்கம் மற்றும் தொடர்பினை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் இந்த பரிசோதனையின் நோக்கம், நோயின் தன்மை மற்றும் செய்யவேண்டிய பரிசோதனை, பரிசோதனை அறீக்கை மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்புகள் குறித்த தகவல்கள், மற்றும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கான வசதிகள் போன்ற சேவைகள் பலவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் நோயாளரினால் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் திகதி, காலம் குறித்து ஞாபகமூட்டுதல்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றமையும் விசேட அம்சமாகும்.
எளிமையாகக் கூறினால் இந்த இணையத்தளத்தின் ஊடாக நோயாளர்களின் அறிக்கைகள் மூலம் அவர்களது ஆரோக்கியம் குறித்த தெளிவான புரிந்துணர்வொன்றையுமு; பெற்றுக் கொள்ள முடியுமென்பதை எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணையத்தளம் குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ ஆய்வுக்கூட சேவைகள் – கலாநிதி லால் சந்திரசேன, நோயின் நிலை குறித்த தெளிவு மற்றும் அறிவு, அந்த நபர்களின் ஆரோக்கிய நிலை குறித்தும் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒரு சாதனமாக இது கருதப்படுகிறது.
நவலோக்க பரிசோதனை ஆய்வுகூடங்கள் இலங்கை அங்கீகார சபையினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடமாக அத்தாட்சியளிக்கப்பட்டுள்ளதோடு இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வைத்திய பரிசோதனைகளும் பரிசோதனை ஆய்வு அங்கீகார சபையினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட குழுவின் கடுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நவலோக்க மருத்துவ ஆய்வுகூட குழுமம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிளை கட்டமைப்பு, சுயாதீன மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் மாதிரிகளை சேகரிக்கும் மத்திய நிலையங்கள் பலவற்றுடன் வலைப்பின்னலில் தமது சேவைகளை நடத்திச் செல்கின்றது. எமது சேவைகள் எப்போதும் பயன்படுத்துவோருக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன் எப்போதும் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக கழிவுகளையும் பெற்றுக் கொடுத்தல், இலவசவமாக பெற்றுக் கொடுக்கப்படும் நடமாடும் சேவைகள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
இந்த இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் அதனை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விசேட தனிநபருக்கான அடையாளம் காணும் இலக்கம் (UPIN) ஒன்று தமக்கென கிடைப்பதோடு நவலோக்க மருத்துவமனையில் அனைத்து சேவைகளுக்காகவும் இணையத்தளத்தில் இணைந்து கொள்வதற்கு இதனால் சந்தர்ப்பம் கிட்டும்.
அண்மையில் நவலோக்க மருத்துவமனைக்கு சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION From JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலை பெற்றுக் கொள்ள முடிந்தது. தங்க முத்திரையினால் சான்றிதழ் அளிக்கப்படும் இந்த தரப்படுத்தலின் ஊடாக சர்வதேச தரத்தில் உடல் ஆரோக்கிய சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவலோக்க மருத்துவனை காட்டும் அர்ப்பணிப்பு சிறந்த விதத்தில் பிரதிபலிக்கின்றது.
நவலோக்க வைத்தியசாலையிடம் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் கணினி நிர்வகிப்பு நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் துரிதமான மற்றும் நோயாளர்களின் தனியுரிமை முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சிறந்த கவனமும் செலுத்தப்படுகின்றது.
எதிர்காலத்தில் நவலோக்க மருத்துவமனையினால் இந்த வசதி கதிரியக்கவியல் மற்றும் ஏனைய பரிபூரண வைத்திய சேவைகளுக்காக விஸ்தரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்போது பாவனையாளர்களுக்கு சீடீ / எம்.ஆர்.ஐ ஸ்கேன் எக்ஸ் கதிர் ஸ்கேன் US ஸ்கேன் மெமோகிரஃபி மற்றும் டெக்ஸா போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனை சேவைகளைத் தவிர ஏனைய சேவைகள் ஈ சேவைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.