உலகம்

மேலும் 28 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் : லுப்தான்சா ஏர்லைன்ஸ்

(UTV | லுப்தான்சா ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 22 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் மேலும் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெருமாலான விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன.

ஆனால், நிலைமையை சீரடையாததால் பல நிறுவனங்களும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்நிலையில், அந்த நடவடிக்கையில் தற்போது ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் பட்சத்தில் லுப்தான்சா நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Related posts

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

டிக் டாக் : மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு