உள்நாடு

இருபது பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று முதல் 7 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயர்நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்பிற்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன் அவ்வாறு அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20 ஆவது திருத்தம் 7 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இருப்பினும் யாரேனும் குறித்த காலப்பகுதியில் 20 ஆவது திருத்தத்திற்கு சவால் விடுவாராயின், உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் தனது முடிவை வழங்க வேண்டும்.

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20 ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

பின்னர் மூன்றாவது வாசிப்பின் போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.

++++++++++++++++++++++++++  UPDATE 08:42AM

20 ஆவது அரசியலமைப்பு : இன்று பாராளுமன்றுக்கு

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக இன்று(22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூகத்தின் நலன்கருதி மு.காவுடன் இணைந்து போட்டியிட்டு ஏமாற்றப்பட்டுள்ளோம் – ரிஷாட் பதியுதீன்

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

SJB தீர்மானத்திற்கு எதிராக டயனா உயர் நீதிமன்றில் மனு