விளையாட்டு

டெல்லி அணியில் இருந்து அஷ்வின் விலகும் சாத்தியம்

(UTV |  இந்தியா) – டெல்லி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து விலகலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவர் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது டெல்லி அணிக்கு பின்னடைவாக அமையும்.

ஏற்கனவே ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் மலிங்கா ஆகியோர் தொடரில் இருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய இலங்கைக்கு திரில் வெற்றி

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்