(UTV | கொழும்பு) – அரச கணக்குகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.
அன்றைய தினம் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் முகாமைத்துவ திறன் மற்றும் நிதி ஒழுக்கத்தை ஆராய்வது கோபா குழுவின் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.