விளையாட்டு

மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

(UTV | ஐக்கிய அரபு அமீரகம் ) – 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஆரம்பமானது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related posts

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் கோலி

தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை