கேளிக்கை

ஓல்கா’வை துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்த காதலன்

(UTV | ரஷ்யா) – ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பாலே நடனக் (BELE DANCE) கலைஞரான ஓல்கா டெமினா (OLGA DEMINA) என்ற அழகிய இளம்பெண் திடீரென மாயமான நிலையில் இன்று வரை அவர் கிடைக்கவில்லை.

ஓல்கா காணாமல் போனதாக கருதி, அவரை பொலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தற்போது அவரது வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஓல்காவின் முன்னாள் மேலாளரும் காதலருமான மல்காஸ் என்பவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர் ஓல்காவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்திருக்கலாம் என பொலிசார் நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக மல்காசின் தந்தை ஆசிட் வாங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

மேலும், ஓல்கா காணாமல் போன அன்று கடைசியாக மல்காசின் மொபைல் சிக்னல் பதிவான இடம் ஒன்றிற்கு அருகே, ஒரு மண்டையோடும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓல்கா காணாமல் போவதற்கு சற்று முன்புதான், மல்காஸ் அவரை ஒரு நிகழ்ச்சியில் நடனமாட வருமாறு கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மல்காஸ் மறுத்துள்ளதோடு, ஓல்கா ஒரு வீடு வாங்கும் மோசடியில் சிக்கியதாகவும், அதனால் வெளிநாட்டுக்கு தப்பியோடி வாழ்ந்து வரலாம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஓல்கா மரணத்திற்கு முன், அவர் மல்காசுக்கு ஏராளமான பணம் கொடுத்ததாக ஓல்காவின் தாய் தெரிவித்துள்ளார். ஓல்கா நிர்வாணக் கோலத்தில் இருக்கும் படங்கள் மல்காசிடம் இருந்தன என்றும், பணம் கொடுக்காவிட்டால் அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஆனால், பணம் கொடுத்த பின்னரும் அந்த படங்கள் ஆன்லைனில் வெளியானதாகவும் ஓல்காவின் தாயார் தெரிவித்துள்ளார்.

Related posts

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பூஜா தட்வா

கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்