(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் கிரேட்டர் மேன்செஸ்டரில் ஒருவர் வித்தியாசமாக மலைப்பாம்பை முகக்கவசம் போல முகத்தை மறைத்து பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பேருந்தில் ஏறிய குறித்த நபர் திடீரென தனது மலைப்பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு முகக்கவசம் போல அதை அணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அந்த பாம்பு பயணியின் கழுத்தில் அமைதியாக இருந்ததாகவும், வேறு பயணிகளுக்கு அது எந்த தொந்தரவையும் தரவில்லை என்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
பிற பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த “பாம்பு மாஸ்க்” பயணி, தனது வளர்ப்புப் பாம்பை முக கவசமாக பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்த செயல் அவருக்கு புகழை தேடிக்கொடுத்திருந்தாலும், ஆபத்தான வகையில் பாம்பை பேருந்தில் கொண்டு வந்ததற்காக பலரது எதிர்ப்புக்கும் அந்த பயணி ஆளாகியிருக்கிறார்.