(UTV | கண்டி) – பேராதனை- பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதற்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்களே, பகிடிவதை தொடர்பில் முறையிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் எடுத்த பல்கலைக்கழக நிர்வாகம், ஆலோசனை சபையின் பரிந்துரைக்கமைய, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென, பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.