(UTV | கொழும்பு) – போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.