உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் எவரும் இனிவரும் காலங்களில் விசாரணை நடத்தப்படும் இடத்துக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்த போது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் மௌலவி ஒருவருக்கு காணொளி படம் எடுக்க உலமா சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதவினார் என்ற குற்றச்சாட்டை அடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் ஐந்து ஆணையாளர்களுக்கும் சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதோடு, ஆணைக்குழுவில் முன்னிலையாகும் அரச சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.