உள்நாடு

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(12) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொவிட் தொற்றால் 40 பேர் பலி

குரல்பதிவுகள் வெளியானமை தொடர்பில் அறிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை