உள்நாடு

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

(UTV | காலி) – கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை, தொலைபேசி பாவனை நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்(11) தொடர்கின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் நேற்று(10) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளுள் 32 கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஞ்சிபானை இம்ரான், பொடிலெசி, வெலே சுதா, உள்ளிட்ட கைதிகள் போராட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!