உள்நாடுவணிகம்

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

Related posts

 மன்னிப்பு கேட்ட மைத்திரி- ஏற்க மறுத்த திருச்சபை

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”