உள்நாடு

சீரற்ற காலநிலை – பல பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு)- கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலகெடிஹேன பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொள்கலன் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மாதம்பே பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மரமொன்று முறிந்து வீழ்ந்த காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

யாழ் இன்று முற்றாக முடங்கியது