வணிகம்

தேயிலை தொழில் துறையை மேம்படுத்த வேண்டும்

(UTV | கொழும்பு) – பின்னடைவை சந்தித்துள்ள தேயிலை தொழில் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணிகளை அடையாளம் கண்டு உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு காணப்பட்ட கேள்வியை மீண்டும் அதிகரிப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை தோட்டங்களை அண்மித்த பகுதியில் பயிர்ச்செய்கை முன்னெடுத்தல், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நட்டம் ஏற்படுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு குறுகிய காலத்தில் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

கொழும்பு பங்குச் சந்தை சரிவு

மில்லியன் டொலருக்கு ஏலம் போன உலகின் முதலாவது டுவிட் பதிவு

30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்